தேவையான பொருட்கள்
வாழைப்பூ -1
பாசி பருப்பு- 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் – 4
உளுந்து பருப்பு – சிறிதளவு
எண்ணெய் -1 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 1/2 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
செய்முறை
வாழைப்பூவின் நரம்பை எடுத்து வைத்துக்கொள்ளவும் , சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசிப்பருப்பு ,சீரகம் , வெங்காயத்தை தண்ணீரில் வேகா வைக்கவும். பருப்பு பாதி வெந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவைச் சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகச் சேர்ந்து வந்ததும் எண்ணெயில் சீரகம் மற்றும் உளுந்தம் பருப்பு தாளித்து கொட்டி இறக்கவும்.