பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள நாடக கலைஞர் தாமரைச் செல்வியின் நடனம் சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் 5 -வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நாடகக் கலைஞரான தாமரைச் செல்வி போட்டியாளர்களுக்குள் ஒருவராக இடம் பெற்றுள்ளார். நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பக் கதையை சொல்லி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் தாமரைசெல்வி.வறுமையின் காரணமாக நாடகத்திற்கு வந்ததாகவும், அதில் பலரின் பேச்சுகளால் அவமானம் அடைந்ததாகவும் கூறினார். அவருடைய இந்த சோகக் கதையை கேட்டு அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். தாமரையின் செல்வாக்கு கூடியுள்ள நிலையில்,அவர் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் தாமரையின் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரே பாட்டும் பாடி நடனமும் ஆடுவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. “இது நடனம் ஆடுவது தாமரையா என்று பலரும் வியந்து அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.