கொச்சி சிறுமிகள் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி போலீசாரிடம் அறிக்கை கேட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சிறுமிகள் ஆன்லைனில் தெரியாத நபர்களிடம் பழகி வந்துள்ளனர். அந்த தெரியாத நபர்களின் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் டெல்லி சென்றுள்ளனர். அந்த சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த கொச்சி போலீசார் பைசான் மற்றும் சுபைர் என்பவர்களிடம் இருந்து சிறுமிகளை மீட்டுள்ளனர். அந்த சிறுமிகளை இந்த இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் சிறுமிகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளனர். சொந்த வீட்டிலேயே அவர்களுடைய சகோதரர்களும் இவர்களை பாலியல் வன் கொடுமை செய்ததாக கூறியுள்ளனர்.
இதன் காரணமாகவே இந்த சிறுமிகள் வீட்டை விட்டு சென்றதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டுள்ளது . இது குறித்த விரிவான அறிக்கையை வரும் நவம்பர் 3 ஆம் தேதிக்குள் சமர்பிக்குமாறு டெல்லி போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.