புதுச்சேரி: புதுவை கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தினவிழாவில் அரசு மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் 2½ வயது குழந்தை சாஹவ் 31 விநாடிகளில் 7 உலக அதிசயங்களை கண்டறிந்து அதன் பெயரை சரியாக சொல்லி 359 பொருட்களின் பெயரை கண்டறிந்து சொல்லி உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. நினைவாற்றல் திறமைக்காக சாஹவுக்கு கவர்னர் தமிழிசை விருதை வழங்கினார். குழந்தை இந்த குழந்தையின் திறமையை பாராட்டி சான்றிதழ், ரொக்கப்பரிசும் அளிக்கப்பட்டது.
மேலும், பிராந்திய அளவில் மேல்நிலை பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அட்டவணை, பழங்குடியின மாணவர்கள் ரோகித், அபிநயா, விஜய், பிரியங்கா ஆகியோருக்கு டாக்டர் அம்பேத்கர் நினைவுப்பரிசாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது. புதுவை பகுதியில் சிறந்து விளங்கிய திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு பேராசிரியர் அம்பாடி நாராயணன் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.