சட்டப்பேரவையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமுமின்றி ஆட்சி செய்து வருகிறோம்.திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது.
தமிழ் மொழி கற்கும் சட்டத்தை 2006ல் கருணாநிதி கொண்டு வந்தார். அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதை அரசு கண்காணிக்கிறது. நமக்கு நாமே திட்டம் பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் விரிவு படுத்தப்படும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படிக்காமல் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற முடியாது. 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடம் என்ற சட்டத்தை இயற்றி, மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார் கலைஞர். “அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருப்பதை இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்கும்” தமிழ்மொழியில் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப்பணிகளில் அமரமுடியாத வகையில் டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படுகிறது.
தமிழியில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பத்தாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2020-21-ல் வாங்கப்பட்ட நிகர கடன் ரூ.88.275 கோடி. 2021-22 -ம் வாங்கப்பட்ட நிகர கடன் ரூ.79.333 கோடி. முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ.4 ஆயிரம் கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளோம்.கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் திறமையான நிர்வாகத்தால் கடனை குறைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.