புதுடெல்லி, கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், ஒரு ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஏர் இந்தியா நேற்று விளக்கம் : சம்பவத்தன்று, ‘பிசினஸ்’ வகுப்பில் பயணம் செய்த ஒரு பெண் பயணி, தன் அருகே உட்கார்ந்துள்ள ஆண் பயணி, தன் மீது சிறுநீர் கழித்து விட்டதாக புகார் தெரிவித்தார்.உள்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு
முதல் விசாரணை முடிந்தது. 10-ந் தேதி, 2-ம்கட்ட விசாரணை நடக்கிறது. மேலும், விமானத்தின் பயண அறிக்கையில் இச்சம்பவம் பதிவிடப்பட்டது. இந்த நிலையில், விமானத்தில் யாராக இருந்தாலும் முறைகேடாக நடந்து கொண்டால் உடனடியாக அதிகாரிகளிடம் இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டாலும் தகவல் தெரிவிக்காமல் இருக்கக் கூடாது என்று ஏர் இந்தியா சிஇஓ கேம்பெல் வில்சன் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.