உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை அனுஷு மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார். முதல் முறையாக உலக மல்யுத்தப் போட்டியில் வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
நார்வே ஒசோலாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 20 வயதான அனுஷு மாலிக் அமெரிக்க வீராங்கனை ஹெலன் மரோலிஸியுடன் இறுதிப்போட்டியில் மோதினார்.அதில் 1-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். முன்னதாக உக்ரைனின் சோலோமியா வின்னிக் எதிர் கொண்ட அனுஷு மகளிருக்கான 57 கிலோ எடை பிரிவில் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு நுழைந்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை அனு ஷுமாலிக் பெற்றுள்ளார். 2010 -ல் சுஷில் குமாரும்,2018 -ல் பஜ்ரங் புனியாவும் உலக மல்யுத்த சாம்பின் ஷிப் போட்டியில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு போட்டியான 59 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டியில் கீதா போகத் , பபிதா போகத் , பூஜா தண்டா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.