ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஜிண்டால் குழுவைச் சேர்ந்த 71 வயதாகும் சாவித்ரி ஜிண்டால், கடந்த ஆண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர் (சுமார் .4 13.46 லட்சம் கோடி), செல்வத்துடன் மொத்த 100 பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். இரண்டாவது பணக்கார பெண் தொழில் அதிபராக ஹேவல்ஸ் இந்தியா குருப்பின் 76 வயதான வினோத் ராய் குப்தா 24 -வது இடத்தில் உள்ளார். இந்த வருடம் இவருடைய வருமானம் 7.6 பில்லியன் டாலராக (கிட்டத்தட்ட ₹ 5.68 லட்சம் கோடி) உள்ளது. அடுத்த இடத்தில் மும்பையைச் சேர்ந்த மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட்டின் 43 வயதாகும் லீனா திவாரி 43- இடத்தில் உள்ளார். இவருடைய மொத்த வருமானம் 4.4 பில்லியன் டாலராக (கிட்டத்தட்ட ரூ. 3.28 லட்சம் கோடி). உள்ளது.
இவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் பைஜுவின் இணை நிறுவனரான திவ்யா கோகுல்நாத்துக்கு 35 வயதாகிறது. இவர் இந்திய 100 பணக்காரர்கள் பட்டியலில் 47 வது இடத்தில் உள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆன்லைனுக்கு மாறியதால் இவருடைய வருமானம் வேகமாக உயர்ந்துள்ளன.திருமதி கோகுல்நாத்தின் செல்வம் கடந்த ஆண்டில் 1 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ₹ 7,477 கோடி) வளர்ந்து 4.05 பில்லியன் டாலராக உயர்ந்து (கிட்டத்தட்ட 0 3.02 லட்சம் கோடி) உள்ளது.
இவரைத் தொடர்ந்து பயோகானின் 68 வயதாகும் கிரண் மசும்தார்-ஷா பெண்கள் பணக்கார பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தாலும் அவர் ஒட்டுமொத்த பட்டியலில் 53 -வது இடத்தை பிடித்துள்ளார். 2020 இல் 4.6 பில்லியன் டாலராக வைத்து (கிட்டத்தட்ட 4 3.43 லட்சம் கோடி) வைத்திருந்தார்.ஆனால் இந்த ஆண்டு இவருடைய வருமானம் குறைந்து நிகர மதிப்பு 3.9 பில்லியனாக டாலராக (கிட்டத்தட்ட ₹ 2.91 லட்சம் கோடி) உள்ளது.
அடுத்த இடத்தில் டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரண தொழிற் நிறுவனத்தின் உரிமையாளர்களான அமல்கமேசன் குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகா சீனிவாசன் 73 -வது இடத்தில் இருக்கிறார். இவருடைய மொத்த வருமானம் 2.89 பில்லியன் டாலராக (கிட்டத்தட்ட 16 2.16 லட்சம் கோடி) உள்ளதாக ஃபோர்ப்சின் இந்தியாவின் நூறு பணக்காரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.