நடிகையும் இயக்குநருமான ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிக்கும் திரைப்படம் ‘தி லாஸ்ட் ஹர்ரே’ படம் உருவாக உள்ளதாக கஜோல் அறிவித்துள்ளார்.
உண்மை கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தத் திரைப்படம் “சுஜாதா என்ற கதாபாத்திர பெண்ணின் சவாலான வாழ்க்கைப் போராட்டத்தை விவரிப்பதாக காஜோல் கூறியுள்ளார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ரேவதி இந்தப் படத்தின் கதைப் பற்றி கூறியபோது இந்த படம் மிகவும் பிடித்துப் போனதாக காஜோல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய ரேவதி “இந்த படத்தின் கதாநாயகியான சுஜாதாவின் கதாபாத்திரம் இதயத்திற்கு மிக நெருக்கமாக உள்ளதாக கூறியுள்ளார். அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற முகத்தை பொருத்தி பார்த்தபோது கஜோலின் முகம் நினைவுக்கு வந்ததாக ரேவதி கூறியுள்ளார். கஜோலின் உற்சாகமான கண்களும் அவருடைய மென்மைதன்மையும் இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் “என்று கூறியுள்ளார்.