day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆவடியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காவலர் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆவடியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காவலர் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மாவட்டம் ஆவடியில் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் சமூதாயநலக்கூடம் மற்றும் தருமபுரி மாவட்டம் தருமபுரியில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டடம். திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள். மொத்தம், 23 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!