விவசாயிகளுக்கு ஆதரவாக சென்ற பிரியங்கா காந்தி வதேரா மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த பிரியங்கா காந்தி, தம்மை கைது செய்த காவல்துறை, காரை விட்டு மோதியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து மற்றொரு பதிவில், விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை காண்பித்து, இந்த வீடியோவைப் பார்த்தீர்களா பிரதமரே.. உங்கள் அரசில் இடம்பெற்ற மத்திய அமைச்சரின் மகன் எவ்வாறு விவசாயிகளை வாகனத்தால் மோதுகிறார் எனப் பார்த்தீர்களா? இந்த வீடியோவை தயவுசெய்து பார்த்தும் , இந்த அமைச்சரை ஏன் இதுவரை நீக்கவில்லை, அவரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை விளக்குங்கள். என பதிவிட்டிருந்தார்.