day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி டிசம்பர் 28-ல் திட்டமிட்டபடி பந்த்: அதிமுக அறிவிப்பு

புதுச்சேரியில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி டிசம்பர் 28-ல் திட்டமிட்டபடி பந்த்: அதிமுக அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நாளை மறுநாள் திட்டமிட்டபடி பந்த் போராட்டம் நடைபெறும் என இன்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: “நாடு சுதந்திரமடைந்தும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல், நிர்வாக ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய சூழல் புதுச்சேரியில் உள்ளது. எனவே யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து தகுதி தர மத்திய அரசை வலியுறுத்தி நாளை மறுநாள் பந்த் போராட்டத்தை அதிமுக நடத்துகிறது.

புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கைக்காக நடைபெறும் ஒரு நாள் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாநில அந்தஸ்திற்காக இதை பொறுத்துக்கொள்ள வேண்டும். வழக்கம்போல திமுக எதிர்த்துள்ளது. கடந்த காலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்தில் எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின் அறிவித்த புதுவைக்கு சம்பந்தமில்லாத பல போராட்டங்களை நடத்தினர். அப்போதெல்லாம் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையா? மக்களை குழப்பி திசை திருப்பும் வேலையில் திமுகவின் ஈடுபடுகின்றனர்.

மாநில அந்தஸ்தில் திமுகவின் கொள்கை, நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அதிமுகவில் கோஷ்டி பூசலை மறைக்கவும், தன்னை நிலை நிறுத்தி கொள்ளவும் பந்த் போராட்டத்தை நான் அறிவித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார். எதிர்கட்சித்தலைவரால் அவர் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை நடத்த முடியுமா? எங்கள் கட்சி பிரச்சினைகளை நாங்கள் பேசி தீர்ப்போம். மக்களுக்கான, மாநில உரிமைக்காக நடைபெறும் போராட்டம்.

மாநில அந்தஸ்தை வேண்டாம் என கூறிய நாராயணசாமிக்கோ, காங்கிரசுக்கோ போராட்டத்தை பற்றி பேச தகுதியில்லை. மத்தியில் நீண்டகாலமாக ஆட்சியிலிருந்த திமுகவும் எந்த முயற்சியும் எடுக்காமல் பேச அருகதையில்லை. உண்மையில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கும், ஆட்சியிலுள்ள பாஜகவுக்கும் மாநில அந்தஸ்து தருவதில் விருப்பமில்லை என்ற சூழல்தான் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!