சென்னை: தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர், துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.