கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விமானப்படை பெண் அதிகாரி, தனது புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி வறுபுறுத்தப்பட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமான படை (Indian Air Force) பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் நாடு முழுவதும் இருந்து விமான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த மைதானத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பயிற்சிக்காக வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, டெல்லியை சேர்ந்த 28 வயதான பெண், விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
அதில் “கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பெண்ணுக்கு காலில் அடிப்பட்டதாகவும். இதற்கான சிகிச்சையோடு, தொடர்ந்து வலி நிவாரண மருந்தும் எடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் ஓய்வு எடுக்க அறைக்கு சென்றபோது பிளைட் லெப்டினண்ட் அமிதேஷ் ஹர்முக் என்பவரால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளார். இந்த புகாரின் கொடுத்து இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இதனிடையே கோவை விமானப்படை நிர்வாகவியல் கல்லூரியின் கமாண்டண்ட்டால் வழக்கை திரும் பெறும்படிபல முறை கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை விமானப்படை பெண் அதிகாரி வன்கொமை செய்யப்பட்டது தொடர்பாக விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.’பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மையா என அறிய இருவிரல் சோதனை மேற்கொண்டது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்று விமானப்படை பெண் அதிகாரி வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.