ஜுனியர் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் மனு பாகர் உட்பட மூன்று பெண்கள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
பெருவில் ஜுனியர் உலக துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் வீராங்கனையான ரிதம் சங்கவான் 577,18 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை கைப்பற்றி இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.மற்ற இந்திய வீராங்கனைகளான மனு பாகர் 574.22 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் , ஈஷா சிங் 572. 17 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தையும் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.