புதுடெல்லி: இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: சீன கடன் செயலிகள் மக்களை தொந்தரவு செய்து ஏமாற்றும் விஷயம் குறித்து கடந்த 6-7 மாதங்களில் மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சகம், கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பல ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளேன்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்தகைய செயலிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த செயலிகளை கட்டுப்படுத்தும் உத்தரவுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பிக்கிறது. எந்த செயலிகளும் மக்களை ஏமாற்றாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ரிசர்வ் வங்கி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய நிதியமைச்சகம் ஆகியவை இணைந்து எடுக்கிறது.