தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா , குரோஷியாவை எதிர்த்து விளையாடுகிறது. லூகா மோட்ரிச் ஒட்டுமொத்த குரோஷியா அணிக்கும் உந்துதல் சக்தியாக திகழ்கிறார். டிஃபன்டர் போர்னா சோசா அணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து எந்த வீரரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை. காயம் பற்றிய கவலைகள் ஏதுமின்றி பயிற்சியாளர் ஸ்லாட் கோடாலிக்கின் மேற்பார்வையில் குரோஷியா அணி நம்பிக்கையுடன் முழு அளவில் அர்ஜெண்டினாவை எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.
லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி 1986-ல் டீகோ மரடோனாவுக்கு பின்னர் பட்டம் வெல்வதற்கான தீவிர வேட்டையில் உள்ளது. 1978-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மகுடம் சூடும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அந்த அணியின் டிபன்டர்களான மார்கஸ் அகுனா, கோன்சாலோ மான்டீல் ஆகியோர் லீக் சுற்றிலும், கால் இறுதியிலும் மஞ்சள் அட்டை பெற்றதால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் இவர்கள் இருவரும் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் களமிறங்க முடியாது. இது அர்ஜெண்டினா அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. மார்கஸ் அகுனாவுக்கு பதிலாக நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ இடம் பெறக்கூடும். அதேவேளையில் கோன்சாலோ மான்டீலுக்கு பதிலாக நஹுவேல் மோலினாவை பயன்படுத்தக்கூடும். மோலினா, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மான்டீலுடன் இணைந்து டிபன்டராக செயல்பட்டார். மேலும் அந்த ஆட்டத்தில் அவர், 35-வது நிமிடத்தில் கோல் அடித்தும் அசத்தியிருந்தார்.
ஏஞ்சல் டி மரியாவின் இடமும், அவரது உடற்தகுதியும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. 34 வயதான அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் கத்தாரில் இதுவரை மாற்று வீரராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார். 35 வயதான லயோனல் மெஸ்ஸி, ஏறக்குறைய தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். கால்பந்து உலகில் அவருக்கு எட்டாக்கனியாக உள்ள உலக சாம்பியன் பட்டத்தை இம்முறை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற இலக்கோடு உள்ளனர்.
அர்ஜெண்டினா அணியானது கால் இறுதி ஆட்டத்தில்நெதர்லாந்துக்கு எதிராக 2-0என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்திய போதிலும்கடைசி 7 நிமிடங்களில் 2 கோல்களை வாங்கியது. கூடுதல் நேரத்திலும் அர்ஜெண்டினா வெற்றியை வசப்படுத்தவில்லை.பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் நெதர்லாந்தின் கோல் அடிக்கும் இரு வாய்ப்புகளை தகர்த்ததால் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி கண்டது.இன்றைய மோதலில் கூடுமானவரையிலும் அர்ஜெண்டினாஅணி பெனால்டிஷூட்அவுட்டுக்கு ஆட்டத்தைஎடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதில் தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும். ஏனெனில் பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா அணி வலுவாக செயல்படக்கூடியது. 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக்கோப்பை தொடரில் குரோஷியா அணிஇரு முறை பெனால்டி ஷூட் அவுட், ஒருகூடுதல் நேர ஆட்டம் வாயிலாகவே இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தது.
கத்தாரில் இம்முறை குரோஷியா அணிஜப்பான் அணிக்கு எதிராகவும், பிரேசிலுக்குஎதிராகவும் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றிபெற்றே அரை இறுதியில் கால் பதித்துள்ளது. புள்ளி விவரங்கள் அடிப்படையில் குரோஷியா அணியானது ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட்டுக்கு எடுத்துச் சென்றால் அர்ஜெண்டினா அணிக்கு சிக்கல் ஏற்படக்கூடும்.இன்றைய இரவு நடைபெறும் ஆட்டத்தை வெல்லும் முனைப்போடு இரு அணிகளும் தயாரகிவருகின்றன.