பெங்களூருவைச் சேர்ந்த நான்கு வயதுடைய சிறுமி இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை கூறி உலக சாதனைப் படைத்துள்ளார்.
கிருஷ்ணகுமார் – சுப்ரணா தம்பியின் மகள் சன்விஷா சி நாயர். நான்கு வயதாகும் இந்தச் சிறுமி அங்குள்ள கிருத்துவப் பள்ளியில் படித்து வருகிறார்,சிறு வயதிலேயே அறிவு கூர்மையுடன் இருந்துள்ளார்.இதை கண்ட இவருடைய பெற்றோர் அவளை போட்டிக்கு தயார் படுத்தியுள்ளனர்.அதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் அதன் தலைநகரையும் 37 நிமிடங்களில் சொல்லி முடித்துள்ளார். அது குறித்த வீடியோவை எடுத்து கலாம் உலக சாதனை அமைப்புக்கு அனுப்பியுள்ளனர்அவருடைய பெற்றோர்கள்,இதை கண்ட உலக சாதனை அமைப்பின் உறுப்பினர்கள் சிறுமி உலக சாதனை படைத்திருப்பதாக அறிவித்து அதற்கான சான்றிதழும் கலாம் உருவம் பொறித்த ஷில்டும் வழங்கி கௌரவித்துள்ளனர்.