day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாகி வருகிறது : ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கருத்து

இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாகி வருகிறது : ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கருத்து

நியூயார்க்:ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது, அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய லாவ்ரோவ், “இன்றைய பல்முனை உலகில் இந்தியா நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சக்தி. பொருளாதார வளர்ச்சி ரீதியாக விரைவில் இந்தியா ஒரு முக்கியமான முன்னணி நாடாகவோ,தலைவராகக் கூட ஆகலாம். ஐ.நா.வில் ஈடுபாட்டுடன் இந்தியா பணியாற்றி வருகிறது. தெற்காசியாவில் பல்வேறு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு பணியையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து சிறப்புடன் செய்து வருகிறது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கலாம். இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகளும், இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா, வரும் 14, 15-ம் தேதிகளில் 2 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்க உள்ளார். குறிப்பாக, 15-ம் தேதி ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!