ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.