நடிகர்கள் ஆர்யா – சாயிஷாகடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தமபதிக்கு கடந்த ஜூலை 23 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இதனை நடிகர் விஷால் தனது சமூக வலைதளம் வழியாக “இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடைய சகோதரன் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் மாமா ஆகியுள்ளேன் என்ற இந்த செய்தி விவரிக்க முடியாதளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுப்பான அப்பாவாக பொறுப்பேற்கும் ஆர்யாவுக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி மகள்கள் தினத்தையொட்டி நடிகர் ஆர்யா தனது மகளின் பெயரை முதன்முறையாக இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இதுவரை மகளின் புகைப்படத்தை வெளியிடாத ஆர்யா மகளுக்கு ‘ஆரியானா’ என்று அவரது பெயரிலிருந்தே தொடங்குவது போல் பெயர் வைத்துள்ளார். மகள் பெயர் அறிவிப்புடன் இரண்டு மாத தந்தையாக என்று பதிவிட்டு மகள்கள் தின வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கிறார்.