தாம்பரம் : கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 துப்பணித்துறை ஏரிகளில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில் 293 ஏரிகள் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் முக்கிய விவசாய பாசன ஏரிகளான திருக்கழுக்குன்றம் பி.வி. களத்தூர் ஏரி. திருப்போரூர் மானாமதிஏரி. சிறுதாவூர் ஏரி. தையூர் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்போரூர் காயார் ஏரி, கொண்டங்கி ஏரி, செய்யூர் பல்லவன் குளம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது மாவட்டத்திலுள்ள 2,512 குளங்களில் 1971 குளங்கள் நிரம்பிவிட்டன ஏரி குளங்களில் உடைப்புகள் ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள 97 ஏக்கர் விவசாய நிலத்தில் புகுந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்து வெளியேறும் நீரை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், கனமழை தொடர்வதால் கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் பாலாற்றின் கரையோரம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு்ள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், ஆற்றை கடக்கவும் ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் இறங்க வேண்டாம். செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. கால்நடைகளை பாலாற்றங்கரையில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளை ஆற்றின் அருகே செல்லாமல் இருக்க பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு நீர் ஆதாரத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.