குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதியும் 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதியும் 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. முன்னதாக, 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடை பெற்றது. இரு மாநிலங்களிலும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க, 182 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும், 182 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 179 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களில் போட்டியிடுகிறது.