சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் 922 கிளைகள் அனைத்திலும் ஐ.எம்.பி.எஸ்.(உடனடி பணம் பரிமாற்றம்) கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் இவை அனைத்திலும் யு.பி.ஐ. வசதியும் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் கூகுள் பே, பே.டி.எம்., பி.எச்.ஐ.எம். உள்ளிட்ட அனைத்து பண மற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.