மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது ஒரு பெண் பயணி சூட்கேஸுக்குள் இருந்த எமர்ஜென்சி லைட்-க்குள் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.