செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று டெல்லியில் இருந்து 75 பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் கள ஆய்வுக்காக வந்திருந்தனர். அவர்கள் மாமல்லபுர சுற்றுலா தளத்தில் மூன்று குழுக்களாக பிரிந்து வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிபார்த்தனர். அப்போது, அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டிகள் மாமல்லபுரத்தின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். முன்னதாக அவர்கள் செங்கல்பட்டு அருகே பழவேலி இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம்தேடி கல்வி மையத்தை பார்வையிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.