சென்னை: நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார். ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காவல் பதக்கம், கோட்டை அமீர் விருது, வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதைதொடர்ந்து விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.