இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,219 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதையொட்டி, நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 56,745ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,27,965ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து நேற்று 9,651 போ் குணமடைந்த நிலையில், இதுவரை 4,38,65,016 போ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.