புதுடெல்லி: மத்திய அரசு , படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
ரயில் மேலாளர், நிலைய மேலாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், காவலர், இளநிலை கணக்கர், வருமான வரித்துறை ஆய்வாளர், வரி உதவியாளர், உதவி பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், நேரடி உதவியாளர் என அரசின் பல்வேறு பணிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 13-ம் தேதி பணி நியமன ஆணையை பெறும் இவர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்ற உள்ளார்.