நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொளி வாயிலாக பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக இன்று 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.