மேற்குவங்கம் மாநிலம் ஜல்பைகுரி நகரில் துர்கா பூஜையின் இறுதி அங்கமான துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது 100க்கும் மேற்பட்ட மக்கள்பூடான் பகுதியில் உள்ள மால் ஆற்றின் கரையில் கூடியிருந்துள்ளனர். அப்போது, ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எண்ணப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டதுடன் காயமடைந்துள்ள 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#WestBengal #Flood #Jalpaiguri #pengalinkural #பெண்களின்குரல்