பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் என்பதால் பல இடங்களில் பெருமாள் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், மூன்றாவது சனிக்கிழமை தினத்தையொட்டி திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமியை வழிபட பக்தர்கள் 7 கிலோமீட்டர் நீள வரிசையில் 52 மணி நேரம் கால்கடுக்கக் காத்திருக்கின்றனர். சிறப்பு நாளில் பெருமாளை தரிக்க அதிக அளவில் பக்தர்கள் ஆந்திரா, தமிழகம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து திருமலைக்கு படையெடுப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.