அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 69.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் வருகிற மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.