தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 5.37 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.