சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டு 6.09 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக 2021-ம் ஆண்டு 3.56 கோடி பேர் அதிகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 2015-ம் ஆண்டில் இருந்து 2022 வரை 15.88 கோடி பேர் பயணித்துள்ளனர்.