சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்பாக 2021-ம் ஆண்டு செப்டம்பரில் அரசுக்கு மனு அனுப்பினேன்.
அரசு தரப்பில் ப்ளீடர் முத்துக்குமார் : “தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. குணமடைந்தவர்களுக்கு கன்னியாகுமரி, வேலூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் 5 இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவிப்பது குறித்து விளக்கமளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.