அமெரிக்கா சிப் தேவைக்கு தைவான், சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்து இருக்கிறது. இதையடுத்து, இந்த நடைமுறையை தவிர்க்க அமெரிக்கா சிப் தயாரிக்கும் ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ளது. அதன்படி, செமிகண்டக்டர் சிப் ஆலை அமைக்கும் நிறுவங்களுக்கு 5200 கோடி அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை வழங்கும் சிப்ஸ் சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய அமெரிக்காவின் வணிகத்துறை அமைச்சர் கினா ரைமண்டோ, தேசிய பாதுகாப்புக் கருதி சிப் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்க பெரும் தொகை செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். எனினும், சிப் தயாரிப்பில் அன்னிய நாடுகளை சார்ந்திருக்காமல் இருக்கும் நிலையை மாற்ற பல்லாயிரம் கோடி டாலர் பணமும், சில பத்தாண்டுகள் காலமும் தேவைப்படும் என துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.