தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு ஏரிகள், அணைகள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்த கனமழையினால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் இன்று காலை 10 மணிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.