மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி பயணிகள் ரயில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில், ரயிலில் உள்ள மூன்று பெட்டிகள் தடம் புரண்டு பயணிகள் ரயிலில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மகாராஷ்டிரா மாநில ரயில்வே காவல்துறையினர் உருகுலைந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.