சென்னை: ஜனாதிபதி திரெளபதி முர்மு, வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார். ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.