இந்த ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழாவில், பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான ஜான் பேட்டிஸ்ட், 5 கிராமி விருதுகளை வென்று அசத்தினார். வீ ஆர்… என்ற ஆல்பம் பாடலுக்காக அவர் விருதை தட்டிச் சென்றார். 14 வருடங்களுக்குப்பின் கறுப்பினத்தவர் ஒருவர், ஆல்பம் பாடல் பிரிவில் கிராமி விருதை வெல்வது இதுவே ஆகும். அவருடைய, ‘கிரை’ என்ற பாடல் 2 பிரிவுகளில் கிராமி விருதுகளையும், ‘ப்ரீடம்..’ என்ற பாடல் சிறந்த மியூசிக் வீடியோவிற்காகவும் கிராமி விருதை வென்றது. ‘சோல்..’ படத்தில் அவருடைய பங்களிப்பிற்காக 1 கிராமி விருதும் கிடைத்தது. முன்னதாக அந்த படத்திற்காக அவர் ஆஸ்கர் விருதும் சமீபத்தில் வென்றிருந்தார் என்பதும், கிராமி விருதுக்காக அவருடைய பெயர் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.