தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல உள்ளனர். இதன் எதிரொலியால், கடற்கரை உள்பட பல்வேறு இடங்களிலும் இன்று கூட்டம் அதிகளவில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து சுற்றுலா தளங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக, மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறதென மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.