ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. அப்போது, பார்வையாளர்கள் அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். ஹரசன் மாகாணம் பிரிவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.