செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் 4ஆவது தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓட்டுக்காக மட்டும் மக்களை சந்திக்க வருபவன் தாம் அல்ல என்றும் எப்போதும் மக்களின் குறைகளை கேட்பவர் தாம் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக எத்தனை போராட்டம் நடத்தினாலும் மக்கள் அதனை நம்பமாட்டார்கள் என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதலமைச்சர் என்று தமிழ்நாட்டில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதில் கூறும் வகையில் பேசியுள்ளார். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிய அண்ணாவின் வார்த்தைகளின் அடிப்படையில் திமுக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.