ஆஸ்திரேலியாவின் லோவி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 2020ம் ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியா 2 புள்ளிகள் இழப்பை சந்தித்துள்ளது. பொருளாதார திறன், இராணுவ திறன் மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது.