இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்தது. இதில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் நேப்பியரில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். கடைசி டி20 போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற கணக்கில் இந்திய அணி ஆட உள்ளது.