day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இன்று இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம்

இன்று இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம்

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மும்பையில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!