வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்போலியில் ராணுவத் தளபதி தலைமையிலான போராளிக் குழுவுக்கும், மற்றொரு குழுவுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 159க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உள்நாட்டுப் போரால் நடக்கும் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்குள்ள மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து அப்பாவி பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றன.