2020ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் பகுப்பாய்வுகள் படி, இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட 29,193 கொலை வழக்குகளில் 3,031 கொலைகள் காதல் விவகாரங்களால் நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் நடக்கும் மொத்தக் கொலைகளில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமானவையாகும். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி, மாநிலங்கள் வாரியாக நடந்த கொலைகளின் எண்ணிக்கையை பார்த்தால், உத்தரப்பிரதேசம் 462, மகாராஷ்டிரா 299, மத்தியப்பிரதேசம் 298, பீகார் 285, தமிழ்நாடு 289, குஜராத் 231 என மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் காதல் உறவுகள் தொடர்பான கொலைகள் அதிகமாகவே நடந்துள்ளதாக தரவுகளின்படி தெரியவருகிறது.