மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன். இவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் லட்சுமணன் வீர மரணமடைந்தார். இவரின் உடல், இறுதி மரியாதைக்காக சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மாநில அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்படி, மதுரை விமான நிலையத்தில் மறைந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் செல்லும்போது அவர் மீது காலணி வீசிய விவகாரத்தில் அவனியாபுரம் காவல்துறையால் 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டநிலையில், இன்று மேலும் 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கைது செய்யப்பட்டவர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.